×

பத்ம விருதுக்கு எழுச்சியூட்டும் நபர்களை பரிந்துரையுங்கள்! மோடி கோரிக்கை

தன்னிகரில்லா சேவை வழங்கிவரும் பிரபலம் அடையாத நபர்களையும் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் 1954 ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது குடியரசு தினத்தன்று வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னிகரில்லா களப்பணிகளில் ஈடுபடும் ஏராளமான மக்கள் இந்தியாவில் உள்ளனர். ஆனால் அவர்கள் குறித்து
 

தன்னிகரில்லா சேவை வழங்கிவரும் பிரபலம் அடையாத நபர்களையும் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் 1954 ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது குடியரசு தினத்தன்று வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னிகரில்லா களப்பணிகளில் ஈடுபடும் ஏராளமான மக்கள் இந்தியாவில் உள்ளனர். ஆனால் அவர்கள் குறித்து நாம் அறிவதில்லை. உங்களுக்கு இப்படிப்பட்ட சாதிக்கத் தூண்டும் நபர்களை தெரியுமா? தெரிந்திருந்தால், அவர்களை பத்ம விருதுகளுக்காக நீங்கள் பரிந்துரைக்கலாம். விளம்பரமில்லாமல் தன்னலமின்றி தொண்டாற்றி வருவோரை பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். செப்டம்பர் 15 ஆம் தேதி வரை வரும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும். padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பரிந்துரைகளை வழங்கலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.