"புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளனவா? ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளதா?"- மோடி
பெருநிறுவனங்களுக்கு அரசு வரிச் சலுகைகளை வழங்கிய பிறகு, அதற்கேற்ப புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளனவா? ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளதா? என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் நடைபெறும் ficci நூற்றாண்டு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பெருநிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டதையும், புதிய வருமான வரி முறையின் கீழ் ₹12 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இந்தியக் கலாசாரம் என்பது ‘உண்போம், குடிப்போம், கொண்டாடுவோம்’ என்பதல்ல. வறுமையிலிருந்து மீண்டவர்கள், கட்டுப்பாடற்ற செலவுகளால் மீண்டும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுவிடக் கூடாது. இதனால், சேமிப்புப் பழக்கத்தை அதிகம் ஊக்குவிக்க வேண்டும்.
கடந்த 12 ஆண்டுகளில் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் உழைப்பால் இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி, கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் 50 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். 100 ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ளது" என்றார்.