×

முழு ஊரடங்கு வேண்டாம்; இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்- பிரதமர் மோடி

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது சிறந்தது. இந்தியாவில் தடுப்பூசித் திருவிழா நடத்தலாம். நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் 14 ஆம் தேதி வரை தடுப்பூசித் திருவிழா நடத்தலாம். கொரோனா தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவை வென்றுள்ளோம். கொரோனா தடுப்பூசியை விட
 

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது சிறந்தது. இந்தியாவில் தடுப்பூசித் திருவிழா நடத்தலாம். நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் 14 ஆம் தேதி வரை தடுப்பூசித் திருவிழா நடத்தலாம். கொரோனா தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவை வென்றுள்ளோம். கொரோனா தடுப்பூசியை விட நோய் தொற்று பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க் அணிவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம்.

நாட்டில் மீண்டும் சவாலான சூழ்நிலை உருவாகி உள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாததால் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் நமது உழைப்பு பலன் தரும்” எனக் கூறினார்.