×

முத்தூட் பைனான்ஸ் குழுமத்தலைவர் காலமானார்!

பிரபல நிதி நிறுவனங்களுள் ஒன்றான முத்தூட் பைனான்ஸ் குழுமத்தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் உடல்நலக்குறைவால் காலமானார். நாட்டில் நகைக் கடன் வழங்கும் பிரபலமான நிறுவனம் முத்தூட் பைனான்ஸ். நாடு முழுவதும் 4,400க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட இந்நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தனது கிளைகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் தலைவர் எம்.ஜி. ஜார்ஜ்(77). கடந்த 2011ல் இந்தியாவின் தலைசிறந்த 50 மனிதர்களுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ், உடல்நலக்குறைவால் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. அவருக்கு
 

பிரபல நிதி நிறுவனங்களுள் ஒன்றான முத்தூட் பைனான்ஸ் குழுமத்தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

நாட்டில் நகைக் கடன் வழங்கும் பிரபலமான நிறுவனம் முத்தூட் பைனான்ஸ். நாடு முழுவதும் 4,400க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட இந்நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தனது கிளைகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் தலைவர் எம்.ஜி. ஜார்ஜ்(77). கடந்த 2011ல் இந்தியாவின் தலைசிறந்த 50 மனிதர்களுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ், உடல்நலக்குறைவால் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று டெல்லியில் அவர் காலமானார். ஜார்ஜின் மறைவு முத்தூட் பைனான்ஸ் குழுமத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2020 ஆம் ஆண்டு கேரளாவிலேயே பெரிய பணக்காரராக திகழ்ந்த ஜார்ஜ், போர்ப்ஸ் இதழின் பணக்கார பட்டியலில் இடம்பெற்ற 6 மலையாளிகளுள் ஒருவராம். இந்திய வர்த்தக கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், வர்த்தக கூட்டமைப்புக்கான கேரள மாநில கவுன்சிலின் தலைவராகவும் ஜார்ஜ் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.