×

இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக முர்மு பதவியேற்பு! – சந்தேகம் கிளப்பும் விமர்சகர்கள்

இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக முர்மு பதவியேற்றார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக இருந்த முர்மு இந்தியத் தலைமை கணக்கு தணிக்கையாளராக (சி.ஏ.ஜி) நியமிக்கப்பட்டார். இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் முர்மு. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக குஜராத்தில் பணியாற்றினார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அவரின் முதன்மைச் செயலாளராக இருந்தார். இதன் அடிப்படையில்
 

இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக முர்மு பதவியேற்றார்.
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக இருந்த முர்மு இந்தியத் தலைமை கணக்கு தணிக்கையாளராக (சி.ஏ.ஜி) நியமிக்கப்பட்டார். இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் முர்மு. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக குஜராத்தில் பணியாற்றினார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அவரின் முதன்மைச் செயலாளராக இருந்தார். இதன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.


தற்போது இந்திய அரசின் வரவு செலவுகளை கண்காணித்து, முறைகேடு நடந்தால் அது பற்றி நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்கும் மிக முக்கியமான அமைப்பான தலைமை கணக்கு தணிக்கையாளர் பதிவியில் அவர் அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த பதவியில் வினோத் ராய் இருந்த போதுதான் 2ஜி முறைகேடு வெளிப்பட்டது.

அதில் ஆ.ராசா விடுதலை ஆனாலும் முறைகேடு நடந்தது என்று மக்கள் இன்றும் உறுதியாக கூறும் அளவுக்கு காரணமாக இருந்தது சி.ஏ.ஜி தலைவராக இருந்த வினோத் ராயின் அறிவிப்புதான். தற்போது அந்த பதவியில் மோடியின் ஆதரவாளர் என்று கூறப்படும் முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். இனி அரசு தொடர்பான எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் அவர் பார்த்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.