×

வீடு வீடாக சென்று அபராதத்தை வசூலிக்கும் மும்பை போக்குவரத்து போலீசார்.. 15 நாளில் ரூ.1 கோடி வசூல்

மும்பையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு அபராதத்தை செலுத்தாமல் இருக்கும் நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று போக்குவரத்து போலீசார் அபராதத்தை வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மும்பை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் அதற்கான அபராத்தை செலுத்தாமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சுமார் ரூ.300 அபராத தொகை வசூல் ஆகாமல் உள்ளது. குறிப்பாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களில் பலரின் அபராத நிலுவை தொகை லட்சக்கணக்கில் உள்ளது. நிலுவையில் இந்த அபராத தொகையை வசூல் மும்பை மாநகராட்சி அதிரடி
 

மும்பையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டு அபராதத்தை செலுத்தாமல் இருக்கும் நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று போக்குவரத்து போலீசார் அபராதத்தை வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

மும்பை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் அதற்கான அபராத்தை செலுத்தாமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சுமார் ரூ.300 அபராத தொகை வசூல் ஆகாமல் உள்ளது. குறிப்பாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களில் பலரின் அபராத நிலுவை தொகை லட்சக்கணக்கில் உள்ளது. நிலுவையில் இந்த அபராத தொகையை வசூல் மும்பை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

போக்குவரத்து காவலர்

மும்பை மாநகராட்சியில் ஒவ்வொரு போக்குவரத்து சவுக்கயிலிருந்து தலா 2 இரண்டு பேர் வீதம் 100 காவலர்கள் அடங்கிய குழு ஒன்றை போக்குவரத்து துறை உருவாக்கியது. போக்குவரத்து விதிமீறல் ஈடுபட்டு அபராதம் செலுத்தாமல் இருக்கும் நபர்களின் முகவரிக்கு சென்று, பணிவுடன் மற்றும் மரியாதையுடன் அவர்களை அணுகவும், அபராத தொகை நிலுவையில் இருப்பதை நினைவூட்டி அபராதத்தை வசூலிப்பது தொடர்பாக 100 காவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

வீட்டுக்கு சென்று அபராதம் வசூலிக்குமு் போலீசார்

இதனையடுத்து, 100 போக்குவரத்து காவலர்களும், விதிமீறல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்தாமல் இருப்பவர்களின் வீடுகளுக்கு சென்று அபராத தொகையை வசூல் செய்து வருகின்றன. கடந்த 15 தினங்களில் மட்டும் விதிமீறல்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளுக்கு சென்று நிலுவையில் உள்ள அபராத தொகையில் ரூ.1 கோடி வசூல் செய்துள்ளனர் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அபராத தொகை செலுத்தாமல் இருக்கும் விதிமீறல்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளுக்கு செல்கையில், போலீசார் உடம்பில் கேமராக்களை மாட்டி செல்கின்றனர். விதிமீறல்களில் ஈடுபட்டவர்களின் பேசுவதை பதிவு செய்வதற்காக இதனை பயன்படுத்துகின்றனர்.