×

கடைசி மகனையும் தொழிலில் களமிறக்கிய முகேஷ் அம்பானி… ஜியோ இயக்குனராக ஆனந்த் அம்பானி நியமனம்

கச்சா எண்ணெய் முதல் தொலைத்தொடர்பு வர்த்தகம் என பல்வேறு துறைகளில் வெற்றி கொடி நாட்டி வரும் ரிலையன்ஸ் இண்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. ஆசியாவின் மெகா கோடீஸ்வரான முகேஷ் அம்பானி-நீத்தா அம்பானி தம்பதியனருக்கு மொத்தம் 3 குழந்தைகள். இதில் ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி ஆகியோர் இரட்டையர்கள். கடைசி மகன்தான் ஆனந்த் அம்பானி. முகேஷ் அம்பானி 5 வருடங்களுக்கு முன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முக்கிய நிறுவனங்களின் இயக்குனர்கள்
 

கச்சா எண்ணெய் முதல் தொலைத்தொடர்பு வர்த்தகம் என பல்வேறு துறைகளில் வெற்றி கொடி நாட்டி வரும் ரிலையன்ஸ் இண்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. ஆசியாவின் மெகா கோடீஸ்வரான முகேஷ் அம்பானி-நீத்தா அம்பானி தம்பதியனருக்கு மொத்தம் 3 குழந்தைகள். இதில் ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி ஆகியோர் இரட்டையர்கள். கடைசி மகன்தான் ஆனந்த் அம்பானி.

முகேஷ் அம்பானி 5 வருடங்களுக்கு முன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முக்கிய நிறுவனங்களின் இயக்குனர்கள் குழுவில் நியமனம் செய்தார். அதேசமயம் தனது இளையமகன் ஆனந்த் அம்பானிக்கு எந்தவித பொறுப்பும் முகேஷ் அம்பானி வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது ஜியோ பிளாட்பார்ம்ஸ் இயக்குனர் குழுவில் இயக்குனராக 25 வயதான ஆனந்த் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தற்போது ஜியோ பிளாட்பார்ம்ஸ் இயக்குனர்கள் குழுவில் அம்பானியின் 3 குழந்தைகளும் தற்போது பணியாற்றுகின்றனர். ஆகாஷ் மற்றும் ஈஷா ஆகியோர் இயக்குனர்களாக உள்ள ரிலையன்ஸ் ரீடெயில் இயக்குனர் குழுவிலும் ஆனந்த் அம்பானி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. முகேஷ் அம்பானி தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கடன் இல்லா நிறுவனமாக மாற்ற தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.