×

டாப் கோடீஸ்வரர்கள்: அம்பானி நம்பர் 1… அதானி நம்பர் 2! – ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அதிரடி லிஸ்ட்!

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் கோடீஸ்வரர்களின் டாப் 10 பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தையும் அதானி இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளார்கள். 2021ஆம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்களின் பெயர்களை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. இதன்படி கடந்த ஆண்டு 102 என்று இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்தாண்டு 140ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. 724 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 698 கோடீஸ்வரர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. அம்பானி ஆசிய
 

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் கோடீஸ்வரர்களின் டாப் 10 பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தையும் அதானி இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளார்கள். 2021ஆம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்களின் பெயர்களை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. இதன்படி கடந்த ஆண்டு 102 என்று இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்தாண்டு 140ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் அதிக கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. 724 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 698 கோடீஸ்வரர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. அம்பானி ஆசிய அளவில் தான் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஆண்டு சீன தொழிலதிபதிபார் ஜாக் மா அந்த இடத்தில் இருந்தார். அவரைப் பின்னுக்குத் தள்ளி அம்பானி உச்சியில் ஏறியிருக்கிறார். அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்.

இரண்டாமிடத்தில் இருக்கும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய். இவர்களைத் தவிர்த்து அடுத்தடுத்த இடங்களில் ஷிவ் நாடார், ராதாகிருஷ்ணன் தமானி, உதய் கோடாக் ஆகியோர் இருக்கின்றனர். உலகளவில் கோடீஸ்வரராக அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர். இரண்டாவது இடத்தில் 151 பில்லியன் டாலருடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் இருக்கிறார்.