×

100 கோடி பயனர்களை எட்டிய கூகுள் ஜெமினி!

 

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.


கூகுளின் 14-வது தயாரிப்பான ஜெமினி, கூகுளின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த காலத்தில் 100 கோடி பயனர்களைச் சென்றடைந்தது. பயனர்களில் சுமார் 63% பேர் தங்களது வினாக்களைத் தட்டச்சு செய்வதற்குப் பதிலாக நேரடியாகக் குரல் மூலம் ஜெமினியிடம் பேச விரும்புகின்றனர். ஜெமினி லைவ் பயன்படுத்துபவர்களில் 5-ல் ஒருவர் (20%), கேமரா நேரலை அல்லது திரைப்பகிர்வு மூலம் நிகழ்நேர உதவிகளைப் பெறுகின்றனர்.

ஜெமினி தினசரி 15 கோடிக்கும் அதிகமான படங்களை உருவாக்குகிறது. ios-ல் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான பயனர்கள் ஜெமினியைப் பயன்படுத்துகின்றனர். ஆண்ட்ராய்டு சாதனங்களில் 40-க்கும் மேற்பட்ட பிரபல செயலிகளின் பணிகளைத் தானியங்கியாக செய்ய ஜெமினி உதவுகிறது.