×

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச்சின்னங்களுக்கு நாளையிலிருந்து அனுமதி!

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியங்களை நாளை முதல் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தற்போது கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் கடைகள், ஹோட்டல்கள் திறக்கப்பட்டுவருவதுடன் போக்குவரத்தை இயக்கவும் அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வழிஒபாட்டு தலங்கள் நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் உள்ள சுமார் 3,700 சுற்றுலா
 

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியங்களை நாளை முதல் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தற்போது கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் கடைகள், ஹோட்டல்கள் திறக்கப்பட்டுவருவதுடன் போக்குவரத்தை இயக்கவும் அரசுகள் முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வழிஒபாட்டு தலங்கள் நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் உள்ள சுமார் 3,700 சுற்றுலா தலங்கள் நாளை திறக்கப்படவுள்ளன.

பார்வையாளர்கள் நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் எனவும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றியே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.