×

“சினிமா எடுக்கலாம்னு சிங்கிள் டீக்கு சிங்கியடிக்க வச்சிட்டியே “-படமெடுப்பதாக கூறி 60லட்சம் ஆட்டைய போட்ட தயாரிப்பாளர்கள் ..

நான்கு பட தயாரிப்பாளர்கள் பொதுமக்களிடம் படமெடுத்து பணத்தை இரண்டு மடங்காக தருவதாக கூறியதை நம்பிய பலர், அவர்களிடம் கொடுத்த பணத்தையெல்லாம் சுருட்டிக்கண்டு ஓடிவிட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது . பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரைச் சேர்ந்த ப்ளூ ஃபாக்ஸ் மோஷன் பிக்சர்ஸ்சின் நான்கு தயாரிப்பாளர்கள் பிரசாந்த் விஜ், ரஞ்சித் சிங், பங்கஜ் கோயல் மற்றும் பி.எஸ்.சின்ஹா என்பவர்கள் .இவர்கள் சினிமா படமெடுக்க திட்டமிட்டனர் ,இதனால் அந்த பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரிடம் எங்கள் சினிமா கம்பெனியில்
 

நான்கு பட தயாரிப்பாளர்கள் பொதுமக்களிடம் படமெடுத்து பணத்தை இரண்டு மடங்காக தருவதாக கூறியதை நம்பிய பலர், அவர்களிடம் கொடுத்த பணத்தையெல்லாம் சுருட்டிக்கண்டு ஓடிவிட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது .

பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரைச் சேர்ந்த ப்ளூ ஃபாக்ஸ் மோஷன் பிக்சர்ஸ்சின் நான்கு தயாரிப்பாளர்கள் பிரசாந்த் விஜ், ரஞ்சித் சிங், பங்கஜ் கோயல் மற்றும் பி.எஸ்.சின்ஹா ​​என்பவர்கள் .இவர்கள் சினிமா படமெடுக்க திட்டமிட்டனர் ,இதனால் அந்த பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரிடம் எங்கள் சினிமா கம்பெனியில் பணம் முதலீடு செய்தால்,நாங்கள் படமெடுத்து அந்த பணத்தை ஒரே வருடத்தில் இரண்டு மடங்காக உங்களுக்கு தருவோம் என்றனர் .
இதை நம்பிய அசோக்குமார் அவர்களிடம் 60 லட்ச ரூபாயை கொடுத்தார் .அது மட்டுமல்ல இன்னும் சிலரிடம் கூட அவர்களின் சினிமா கம்பெனியில் பணம் முதலீடு செய்ய வைத்தார் .அதைஎல்லாம் வாங்கிக்கொண்ட நான்கு பேரும் சினிமா எடுக்காமல் ,தங்களின் படக்கம்பெனியை மூடிவிட்டு பணத்தோடு

தலைமறைவாகிவிட்டனர் ,இதனால் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த அசோக்குமார் அதில் தோல்வியடைந்தார் .இதனால் அவர் அந்த நான்கு தயாரிப்பாளர்கள் மீது போலீசில் புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள் .இப்போது அவர்களின் சினிமா கம்பெனியில் பணத்தை போட்ட பலர் ஏமாந்து போயுள்ளனர் .