“வயசாயிட்டு... கீழே அமர்ந்து கத்துங்கள்”- காங். தலைவர் கார்கேவிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி
குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. எதிர்க்கட்சிகளின் கடும் முழக்கங்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும். நான் பேசுவதை கேளுங்கள், என்னை பேச அனுமதியுங்கள். இந்த அவையில் தற்பொழுது பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மிகவும் வயதானவர். எனவே அவர் உட்கார்ந்து கொண்டு கூட முழக்கங்களை எழுப்பலாம். அவர் நின்று கொண்டு முழக்கங்களை எழுப்புவது பார்க்க கஷ்டமாக இருக்கிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டே வர்த்தக ஒப்பந்தங்களில் புரட்சி செய்து வருகிறோம். நாங்கள் செய்த ஒப்பந்தத்தை போல யாராவது செய்துள்ளார்களா? தேச நலன், அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் குடியரசுத் தலைவர் உரையில் உள்ளன. இந்த நூற்றாண்டின் 2-வது காலாண்டு இந்தியாவுடையதாக இருக்கும். உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்கும் வலிமைமிக்க நாடாக இந்தியா விளங்குகிறது. உலக பொருளாதாரத்தில் 2014இல் 11வது இடம் இருந்தோம். தற்போது 3வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. நாம் செய்துள்ள ஒப்பந்தத்தால் உலக சந்தைகள் இந்தியாவிற்காக திறந்து உள்ளது” என பேசினார்.
மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்