×

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியே 90 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 29 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். முதல் அலையை விட கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை
 

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியே 90 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 29 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். முதல் அலையை விட கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

இந்நிலையில் பல்வேறு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளுடன் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரையை நிறைவு செய்து டெல்லி திரும்பிய பின்னர், இரவு 8 மணிக்கு கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி கையிருப்பு குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார்