×

“ரூ.2,000 பணம் கொடுக்கிறது மோடி அரசு” : முழு விவரங்கள் உள்ளே!

பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் ஏழாவது தவணை பணம் இந்த மாதத்திற்குள் டெபாசிட் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் விவரங்களை இந்த செய்திக் குறிப்பில் பார்ப்போம். விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் கிசான் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டுக்கான உதவித் தொகை கொரோனா காலத்திலும் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது 7 ஆவது தவணை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தங்களது பெயரில் நிலம் வைத்திருக்கக்
 

பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் ஏழாவது தவணை பணம் இந்த மாதத்திற்குள் டெபாசிட் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் விவரங்களை இந்த செய்திக் குறிப்பில் பார்ப்போம்.

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் கிசான் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டுக்கான உதவித் தொகை கொரோனா காலத்திலும் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது 7 ஆவது தவணை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தங்களது பெயரில் நிலம் வைத்திருக்கக் கூடிய விவசாயிகளும், நகர்ப்புறங்களை சேர்ந்த விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். ஆனால் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் இந்த உதவித் தொகையை பெற முடியாது.

கிசான் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரையில் 6ஆவது தவணை பணம் டெபாசிட் செய்யப்பட்டது. தங்களுக்கு நிதியுதவி கிடைத்து விட்டதா என சந்தேகம் இருக்கும் விவசாயிகள், https://pmkisan.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். அதில், ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்தால் விவரங்கள் கிடைத்து விடும்.

இந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 7ஆவது தவணை பணம் டிசம்பர் 1ம் தேதி முதல் டெபாசிட் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. 6ஆவது தவணை பணத்தை பெறாதவர்களுக்கு இந்த பணம் கிடைக்காதாம். அதாவது, விண்ணப்ப படிவங்களில் தவறு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பணம் வழங்கப்படாது என்றும் தவறை சரி செய்யும் வரை அவர்களுக்கு உதவி பணம் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.