#KarnatakaElectionResults மஜத தலைவர் குமாரசாமி, சித்தராமையா முன்னிலை
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி உள்ள நிலையில்,வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தபால் வாக்குகளை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
- சன்னபட்னா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முன்னிலையில் உள்ளார். இத்தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஸ்வரா முன்னிலை வகித்த நிலையில் குமாரசாமி சன்னபட்னா தொகுதியில் மீண்டும் முன்னிலையில் உள்ளார்.
-
அதேபோல் முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார் . காந்திநகர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் உள்ளார்.
- பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர் தார்வாட் தொகுதியில் முன்னிலை பெற்று, தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்
- அத்துடன் தபால் வாக்கு எண்ணிக்கையில் மல்லேஸ்வரம் ,கே ஆர் புரம் தொகுதி, சி.வி. ராமன் தொகுதியிலும் பாஜக முன்னிலையில் இருக்கிறது. சர்வஜன நகர் , புலிகேசி நகரில் காங்கிரஸ் கட்சியும், மகாலட்சுமி நகரில் பாஜகவும் முன்னிலையில் உள்ளது. ஷிகவான் தொகுதியில் கர்நாடக முதல்வர் பொம்மை முன்னிலையில் வைத்து வருகிறார்