×

உக்ரைன், இங்கிலாந்து உள்பட 17 நாடுகளுக்கு இந்தியர்கள் இனி விமானத்தில் பறக்கலாம்..

சர்வதேச விமான சேவையை தொடங்குவது தொடர்பாக உக்ரைனுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே விமானங்களை இயக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து உக்ரைன் உள்பட 17 நாடுகளுக்கு இந்தியர்கள் விமானங்களில் செல்ல முடியும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கிய கடந்த மார்ச் முதல் இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் அனைத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தின. வெளிநாடுகளில் சிக்கி தவித்த சொந்த நாட்டவர்களை சிறப்பு விமானங்கள்
 

சர்வதேச விமான சேவையை தொடங்குவது தொடர்பாக உக்ரைனுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே விமானங்களை இயக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து உக்ரைன் உள்பட 17 நாடுகளுக்கு இந்தியர்கள் விமானங்களில் செல்ல முடியும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கிய கடந்த மார்ச் முதல் இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் அனைத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தின. வெளிநாடுகளில் சிக்கி தவித்த சொந்த நாட்டவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் பல நாடுகள் அழைத்து கொண்டன. கொரோனா வைரஸ் நிலவரம் கட்டுக்குள் வந்ததும் உலக நாடுகள் உள்நாட்டு விமான போக்குவரத்தை மட்டும் இயக்கின.

ஏர் இந்தியா விமானம்

இந்தியாவில் மே மாத இறுதியில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. இதனை தொடர்ந்து சர்வதேச விமான சேவையை தொடங்க மத்திய அரசு ஆர்வம் காட்டியது. மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து என மொத்தம் 16 நாடுகளுடன் இரு நாடுகளுக்கு இடையே சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அந்நாடுகள் சம்மதம் தெரிவித்ததையடுத்து அந்நாடுகளுக்கு (மொத்தம் 16) சர்வதேச பயணிகள் விமானங்களை இந்தியா இயக்கி வருகிறது.

விமானம்

இந்த சூழ்நிலையில் உக்ரைனுடன் இரு நாடுகளுக்கு இடையே சர்வதேச விமானங்களை இயக்குவது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் இருநாடுகளுக்கு இடையே பயணிகள் விமானங்களை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்தியர்கள் இனி உக்ரைன், ஆப்கானிஸ்தான், பக்ரைன், கனடா, ஒமன், பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், மாலத்தீவு, நைஜீரியா, கத்தார், கென்யா, பூடான், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 17 நாடுகளுக்கு விமானங்களில் பறக்கலாம்.