மணிப்பூரில் நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது - ஸ்மிருதி இராணி
மணிப்பூரில் இருந்து வெளிவந்துள்ள 2 பெண்களின் பாலியல் வன்கொடுமையின் கொடூரமான வீடியோ கண்டிக்கத்தக்கது மற்றும் மனிதாபிமானமற்றது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.
மணிப்பூரில் சூகி பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த பெண்கள் மர்மநபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் இரு பெண்களும் கதறி அழுவும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த கொடூரமான செயலுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சூகி பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ITLF தேசிய மகளிர் ஆணையத்திடமும், பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடமும் முறையிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. யார் மீதும் வழக்குபதிவு செய்யவில்லை என தெரிகிறது.