×

கொரோனா காலத்தில் நல்ல லாபம் பார்த்த மைண்ட்ட்ரீ… லாபம் மட்டும் ரூ.213 கோடியாம்…

எல் அண்டு டி-க்கு சொந்தமான தகவல் தொழில்நுட்ப சேவை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மைண்ட்ட்ரீ நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.213 கோடி ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டின் ஜூன் காலாண்டுடன் ஒப்பிட்டால் அந்நிறுவனத்தின் லாபம் 130 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் 2020 மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது லாபம் 3.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. நடுத்தர தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவமான மைண்ட்ட்ரீ கடந்த ஜூன் காலாண்டில்
 

எல் அண்டு டி-க்கு சொந்தமான தகவல் தொழில்நுட்ப சேவை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மைண்ட்ட்ரீ நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.213 கோடி ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டின் ஜூன் காலாண்டுடன் ஒப்பிட்டால் அந்நிறுவனத்தின் லாபம் 130 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் 2020 மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது லாபம் 3.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

நடுத்தர தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவமான மைண்ட்ட்ரீ கடந்த ஜூன் காலாண்டில் ரூ.1,908.8 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது 2019 ஜூன் காலாண்டுடன் ஒப்பிட்டால் 4.1 சதவீதம் அதிகமாகும். இருப்பினும் கடந்த மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது வருவாய் 6.9 சதவீதம் குறைந்துள்ளது.

மைண்ட்ட்ரீ நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் புதிதாக 6 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் செயல்பாட்டில் உள்ள மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 292ஆக உள்ளது. கடந்த ஜூன் காலாண்டு இறுதி நிலவரப்படி மைண்ட்ட்ரீ நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை 21,955ஆக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.