×

” சட்னி விற்பது போல -விலை போகும் ஏழைகளின் கிட்னி “உஷார் !ஊடகத்தில் உலாவரும் கிட்னி உருவும் கூட்டம் ..

ஏழைகளிடம் மலிவு விலையில் கிட்னி வாங்கி அதை பல பணக்கார நோயாளிகளிடம் விற்று பல கோடிகள் சம்பாதித்த ஒரு கிட்னி தரகரை போலீசார் கைது செய்தனர் . ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 25 வயதான டோகிபார்த்தி சண்முகா பவன் சீனிவாஸ் என்பவர் , ஒரு காலத்தில் விமான பராமரிப்பு பொறியாளராக ஸ்ரீலங்காவினல் பணியாற்றினார் . ஆனால் அநத வேலையை விட்டு ஹைதராபாத் வந்து ஷேர் மார்க்கெட் வியாபாரத்தில் இறங்கிய அவர் பல லட்சங்களை இழந்து கடன்
 

ஏழைகளிடம் மலிவு விலையில் கிட்னி வாங்கி அதை பல பணக்கார நோயாளிகளிடம் விற்று பல கோடிகள் சம்பாதித்த ஒரு கிட்னி தரகரை போலீசார் கைது செய்தனர் .

ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 25 வயதான டோகிபார்த்தி சண்முகா பவன் சீனிவாஸ் என்பவர் , ஒரு காலத்தில் விமான பராமரிப்பு பொறியாளராக ஸ்ரீலங்காவினல் பணியாற்றினார் .

ஆனால் அநத வேலையை விட்டு ஹைதராபாத் வந்து ஷேர் மார்க்கெட் வியாபாரத்தில் இறங்கிய அவர் பல லட்சங்களை இழந்து கடன் காரனாக மாறினார் .கடனாளியான அவர் அதிலிருந்து மீண்டு பணக்காரனாக மாற கிட்னி வியாபாரத்தில் இறங்கினர் .அதனால் சமூக ஊடகங்களில் பலரிடம் நட்பு கொண்டு பழகுவார் .பிறகு அவர்கள் ஏழை என்றால் உடனே அவர்களின் கிட்னியை விற்றால் 6 லட்சம் வாங்கி தருவதாக விலை பேசுவார் .

அதன்பிறகு கிட்னி தேவைப்படும் நோயாளிகளிடம் தொடர்பு கொண்டு அவர்களிடம் 30லட்சம் ,40 லட்சத்திற்கு விற்பார் .இப்படி பாரதி என்ற பெண்ணின் கணவர் நாகராஜுக்கு கிட்னி தேவைப்பட்டதால் அவர்களிடம் 34 லட்சத்திற்கு கிட்னி ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார் .இதனால் அந்த பாரதி போலீசில் அவர் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீநிவாஸை கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது .

அவர் இது போல 30க்கும் மேற்பட்ட ஏழைகளிடம் மலிவு விலையில் கிட்னி வாங்கி ,அதை பல பணக்காரர்களிடம் விற்று பல கோடிகள் சம்பாதித்துள்ளது தெரிய வந்தது .பிறகு ஸ்ரீநிவாஸை கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினர் .