நிலநடுக்கத்தால் உருகுலைந்த நேபாளத்திற்கு ஆதரவளித்த பிரதமர் மோடி!
Nov 4, 2023, 10:10 IST
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று நள்ளிரவு 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .
நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆனது டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் எதிரொலித்து நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது.