×

சிறந்த மலையாள திரைப்படமாக “மஞ்சும்மல் பாய்ஸ்” தேர்வு

 

2024ம் ஆண்டுக்கான கேரள திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டின் கேரள அரசின் திரைத்துறை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மலையாள திரைப்படமாக “மஞ்சும்மல் பாய்ஸ்“ தேர்வு செய்யப்பட்டது. சிறந்த மலையாள திரைப்பட கதாநாயகனான மம்முட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். “பிரம்மயுகம்” திரைப்படத்திற்காக சிறப்பு நடிகருக்கான விருதை வென்றுள்ளார் மம்முட்டி. கேரள அரசு வழங்கும் விருதுகளில் சிறந்த நடிகர் பிரிவில் மம்முட்டி பெறும் 7வது விருது இதுவாகும்.

சிறந்த மலையாள திரைப்பட கதாநாயகியாக ஷம்லா ஹம்சா தேர்வாகியுள்ளார். “மஞ்சும்மல் பாய்ஸ்“ படத்தில் சிறப்பாக பாடல் எழுதி பாடியதற்காக வேடனுக்கு விருது வழங்கப்படவுள்ளது.