×

25 வயது வரை காத்திருக்க வேண்டாம் 21 வயசுலே தண்ணி (மது) அடிக்கலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அரசு

மது அருந்துவதற்கான சட்டப்பூர்வமான வயதை 25 வயதிலிருந்து 21 வயதாக குறைக்க உள்ளதாக டெல்லி அரசு தகவல் தெரிவித்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. நாட்டில் பல மாநிலங்கள் மது விலக்கை எப்படி அமல்படுத்தால் என்று சிந்தித்து கொண்டு இருக்க, மது அருந்தும் பழகத்தை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை எடுத்து வருவது போல் தெரிகிறது. டெல்லியில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ
 

மது அருந்துவதற்கான சட்டப்பூர்வமான வயதை 25 வயதிலிருந்து 21 வயதாக குறைக்க உள்ளதாக டெல்லி அரசு தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. நாட்டில் பல மாநிலங்கள் மது விலக்கை எப்படி அமல்படுத்தால் என்று சிந்தித்து கொண்டு இருக்க, மது அருந்தும் பழகத்தை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை எடுத்து வருவது போல் தெரிகிறது.

மனிஷ் சிசோடியா

டெல்லியில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயதை 25 வயதிலிருந்து 21 வயதாக குறைக்க உள்ளது. இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறுகையில், மது அருந்துவதற்கான அனுமதிக்கத்தக்க வயது பல்வேறு மாநிலங்களில் மாறுபடுகிறது. பக்கத்து மாநிலம் உத்தர பிரதேசத்துக்கு இணையாக மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயதை கொண்டு வரும்படி அமைச்சரவை குழு பரிந்துரை செய்தது.

மதுக்கடை

இதனால் டெல்லியில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயதை 25 வயதிலிருந்து 21 வயதாக குறைக்கப்படும். அதேசமயம் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மது சேவை செய்யும் உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெற்றோறை தவிர, அவர்களை கண்காணிக்க யார் அனுமதிக்கப்படுவார்கள் என்பதை தீர்மானிக்க விரைவில் விதிகள் இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரவித்தார்.