☰
×

"விநாயகர் கடவுளே இல்லை"- விநாயகர் சிலை இருந்த காரை உதைத்து ரகளை செய்த நபர்

 

"விநாயகர் கடவுளே இல்லை" என்று கூச்சலிட்டு, விநாயகர் சிலை இருந்த காரை உதைத்து ரகளை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் ஹென்னனூரில் சிவக்குமார் என்பவர்,  "விநாயகர் கடவுளே இல்லை"  என்று கூச்சலிட்டு, விநாயகர் சிலை இருந்த காரை உதைத்து ரகளை செய்த நபர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சிகிச்சைக்காக நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தார். இந்தச் சம்பவம் ஹோராமாவு அருகே உள்ள பன்ஜாரா லேஅவுட்டில் நிகழ்ந்துள்ளது.  போலீசார் விசாரணையின்போது, ​​சிவகுமார் ஏற்கனவே பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் (நிம்ஹான்ஸ்) சிகிச்சை பெற்று வந்துள்ளார். காவல்துறையிடம் பகிரப்பட்ட புகார் மற்றும் வீடியோ காட்சிகளின்படி, சிவகுமார் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, ​​ஒரு காருக்குள் விநாயகர் சிலையைக் கண்டதும் அதை உதைத்ததாகக் கூறப்படுகிறது.  அவர் அப்பகுதியில் இருந்தவர்களைப் பார்த்து "விநாயகர் கடவுள் அல்ல" என்று கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன், அவர் தகாத வார்த்தைகளைப் திட்டியதாகவும் கூறப்படுகிறது.  அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அறிந்த காவல்துறை, அவரைக் கைது செய்து, நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது.