×

‘அடப்பாவி அநியாயமா எங்கம்மாவை கொன்னுட்டியே’ -கொரானாவால் இறந்த தாய்க்கு சிகிச்சையளித்த டாக்டர் மீது தாக்குதல்..

நாட்டில் கொரானா நோய் கொடுமை ஒருபக்கம் மக்களை வதைக்கிறதென்றால் ,அதனால் பல விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்து மக்களிடையே பீதியை உண்டுபண்ணுகிறது .கொரானா வைரஸ் தாக்கி இறந்த பெண்ணுக்கு , டாக்டர் சரியாக சிகிச்சையளிக்கவில்லையென்று அவரின் மகன் டாக்டரை தாக்கிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது . மகாராஷ்டிராவின் லாதூர் நகரில் உள்ள சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ,உத்ரகிரில் வசிக்கும் 35 வயதான நபரின் 60 வயதான தாய் ஜூலை 25 ஆம் தேதி கொரோனா வைரஸுக்கு சாதகமான பரிசோதனையை
 

நாட்டில் கொரானா நோய் கொடுமை ஒருபக்கம் மக்களை வதைக்கிறதென்றால் ,அதனால் பல விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்து மக்களிடையே பீதியை உண்டுபண்ணுகிறது .கொரானா வைரஸ் தாக்கி இறந்த பெண்ணுக்கு , டாக்டர் சரியாக சிகிச்சையளிக்கவில்லையென்று அவரின் மகன் டாக்டரை தாக்கிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது .

மகாராஷ்டிராவின் லாதூர் நகரில் உள்ள சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ,உத்ரகிரில் வசிக்கும் 35 வயதான நபரின் 60 வயதான தாய் ஜூலை 25 ஆம் தேதி கொரோனா வைரஸுக்கு சாதகமான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவருக்கு கொரானாவுடன் பல்வேறு நோய்களும் இருந்ததால் புதன்கிழமை காலையில் அவர் இறந்தார் .அப்போது டாக்டர் தினேஷ் வர்மா என்ற டாக்டர் அவருக்கு சிகிச்சையளித்தார் .
அந்த டாக்டர் இறந்த பெண்ணின் உறவினர் மற்றும் மகனிடம் ‘உங்களின் தாய் கொரானா தாக்கி சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்’ என்று தகவல் கூறினார் .
உடனே இந்த செய்தியை கேட்டதும் அவரின் உறவினர்கள் அவரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .அப்போது அவரின் மகன் டாக்டரின் நெஞ்சிலும் ,முகத்திலும் ,கழுத்திலும் கடுமையாக தாக்கினார் .அப்போது அங்கிருந்தவர்கள் டாக்டரை அவரிடமிருந்து காப்பாற்றி வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் ,இப்போது அந்த மருத்துவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இந்த தாக்குதல் சம்பவத்தால் அந்த கொரானா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகளிடையே பதட்டம் நிலவியது .மேலும் போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .