×

விளம்பரம் கொடுத்த நபர்-வந்த போன் கால் -அடுத்து புது டெக்னீக்கில் நடந்த மோசடி.

ஏர்கூலர் விற்க ஆன்லைனில் விளம்பரம் கொடுத்த நபரை ஒருவர் நூதன முறையில் 2.8 லட்ச ரூபாயை ஏமாற்றியுள்ளார் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் பரேஷ் மாத்தூர் என்ற 44 வயதான நபர் , தனது ஏர் கூலரை விற்க OLX இல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ஒருவர் பரேஷை போனில் தொடர்பு கொண்டார் .அப்போது அவர் பரெஷிடம் தான் அந்த ஏர்கூலரை வாங்கி கொள்வதாகவும் ,அதனால் அதை வேறு யாரிடமும் விற்க வேண்டாம் என்று
 

ஏர்கூலர் விற்க ஆன்லைனில் விளம்பரம் கொடுத்த நபரை ஒருவர் நூதன முறையில் 2.8 லட்ச ரூபாயை ஏமாற்றியுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் பரேஷ் மாத்தூர் என்ற 44 வயதான நபர் , தனது ஏர் கூலரை விற்க OLX இல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ஒருவர் பரேஷை போனில் தொடர்பு கொண்டார் .அப்போது அவர் பரெஷிடம் தான் அந்த ஏர்கூலரை வாங்கி கொள்வதாகவும் ,அதனால் அதை வேறு யாரிடமும் விற்க வேண்டாம் என்று கூறினார் .அதனால் பரேஷும் அந்த ஏர்கூலரை வேறு யாரிடமும் விற்காமல் இருந்தார் .இந்நிலையில் அந்த நபர் கடந்த மாத இறுதியில் பரேஷை தொடர்பு கொண்டு தங்களின் அக்கௌன்ட் விவரத்தை அனுப்பினால் ஏர்கூலருக்கான பணத்தை அனுப்புவதாக கூறினார் .

ஆன்லைன் அக்கௌன்ட் பற்றி அதிக விவரம் தெரியாத அந்த பரேஷ் தன்னுடைய அக்கௌன்ட் விவரத்தை அவருக்கு அனுப்பினார் .பிறகு அவர் பரேஷிக்கு  QR குறியீடுகளை அனுப்பினார்.மேலும் அவர் அனைத்தையும் ஸ்கேன் செய்து அனுப்புமாறு கூறினார் .அதை அவர் ஸ்கேன் செய்ததும் அவரின் அக்கௌன்ட்டிலிருந்து 2.8 லட்ச ரூபாயை அவர் ஆட்டைய போட்டு விட்டார் .மேலும் அவர் அந்த ஏர்கூலரை எடுத்து கொள்ளவும் வரவில்லை

அதன் பிறகு பரேஷின் அகௌண்டிலிருந்த 2.8 லட்ச ரூபாய் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார் .அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை .அதனால் பரேஷ் அந்த நபர் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த நபரை பிடிக்க விசாரித்து வருகின்றனர்