×

ஆக்சிஜன் சிலிண்டரோடு வந்த லாரி -நோட்டமிட்ட கூட்டம் -அடுத்து நடந்த கொரானா கால கொடுமை .

ஆக்சிஜென் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியை கடத்தி பணம் கேட்டு ப்ளாக் மெயில் செய்த கூட்டத்தை போலீசார் கைது செய்தனர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் உள்ள மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜென் சிலிண்டர்களை ஏற்றிகொண்டு ஒரு லாரி கடந்த ஞாயிற்று கிழமை இரவு வந்து கொண்டிருந்தது .அப்போது அந்த லாரியை ஒரு கூட்டம் கடத்தி செல்ல திட்டமிட்டு ஒரு வேனில் பின் தொடந்து வந்தனர் .அந்த வேனில் வந்த நபர்கள் அந்த லாரியை ஒரு இடத்தில்
 

ஆக்சிஜென் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியை கடத்தி பணம் கேட்டு ப்ளாக் மெயில் செய்த கூட்டத்தை போலீசார்  கைது செய்தனர்

டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் உள்ள மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜென் சிலிண்டர்களை ஏற்றிகொண்டு ஒரு லாரி கடந்த ஞாயிற்று கிழமை இரவு வந்து கொண்டிருந்தது .அப்போது அந்த லாரியை ஒரு கூட்டம் கடத்தி செல்ல திட்டமிட்டு ஒரு வேனில் பின் தொடந்து வந்தனர் .அந்த வேனில் வந்த நபர்கள் அந்த லாரியை ஒரு இடத்தில் மோதி விட்டு நிறுத்தினார்கள் .பின்னர் அந்த ஆக்சிஜென் லாரியிலிருந்து இறங்கிய  ட்ரைவர் அமோத்தை அவர்கள் கடத்தி வைத்துக்கொண்டனர் .

இன்னொரு பக்கம் அந்த ஆக்சிஜென் லாரியை ஒரு இடத்தில் ஒளித்து வைத்தனர் .அதன் பிறகு அந்த கடத்தல் நபர்கள் அந்த லாரியின் உரிமையாளருக்கு இந்த கடத்தல் லாரியை பற்றி வீடியோ எடுத்து அனுப்பினார்கள் .அதன் பிறகு அந்த லாரி உரிமையாளரிடம் அந்த லாரியை விடுவிக்க ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டனர் .

ஆனால் அந்த லாரி உரிமையாளர் நிறைய நோயாளிகள் அந்த ஆக்சிஜனுக்காக உயிருக்கு போராடி வருவதாக  கூறியும் அவர்கள் விடவில்லை .அதன் பிறகு அந்த லாரி ஓனர் போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த லாரி கடத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு விரைந்து வந்தார்கள் .

அதன் பிறகு அந்த லாரியையும் அந்த ட்ரைவரையும் மீட்டனர் .பிறகு இந்த கடத்தலில் ஈடுபட்ட டிங்கு, ஜிதேந்திர குமார் சிங் மற்றும் வினய் சவுகான் ஆகியோரை கைது செய்தார்கள் .