×

பயந்து ஓடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்…தாயின் சடலத்தை பைக்கில் எடுத்து சென்ற மகன்!

உயிரிழந்த தாயின் சடலத்தை, அவரது மகன் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சோகம் ஆந்திராவில் நடந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அத்துடன் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,771 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,97,894 ஆக அதிகரித்துள்ளது.அதே சமயம் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறையால் நோயாளிகள் தரையில்
 

உயிரிழந்த தாயின் சடலத்தை, அவரது மகன் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சோகம் ஆந்திராவில் நடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அத்துடன் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,771 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,97,894 ஆக அதிகரித்துள்ளது.அதே சமயம் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறையால் நோயாளிகள் தரையில் படுத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சிகாகுளம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட அவரது மகன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மஞ்சுளாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தாய் இறந்துவிட்டதை அறிந்த மஞ்சுளா மகன், ஆம்புலன்ஸ் சேவையை அணுகியுள்ளார் .ஆனால் இறந்த மஞ்சுளாவுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மஞ்சுளா உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்தனர். இதனால் செய்வதறியாது திகைத்து போன மஞ்சுளா மகன், தாயின் உடலை நண்பரின் உதவியுடன் பைக்கில் எடுத்துசென்றார். இந்த காட்சி அங்கிருந்தவர்களை கலங்க செய்தது.