×

ஏடிஎம் மில் சிக்கிய கார்டு -உதவிக்கு வந்த நபர் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் .

ஒரு முதியவரை ஏமாற்றி அவரின் அக்கௌன்ட்டிலிருந்து ஏடிஎம் மில் பணம் எடுத்து கொண்டு ஓடிய ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர் . குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஆனந்தநகரில் வசிக்கும் 60 வயதான நபர் தன்னுடைய டெபிட் கார்டை எடுத்து கொண்டு செவ்வாய்க்கிழமை, ஏடிஎம் முக்கு பணம் எடுக்க சென்றார் .அப்போது அவர் 10000 ரூபாய் பணம் எடுத்ததும் அவரின் கார்டு அந்த ஏடிஎம் மில் சிக்கிக்கொண்டது .அதனால் பதட்டமடைந்த அந்த பெரியவர் அங்குள்ள வங்கியில் இது
 


ஒரு முதியவரை ஏமாற்றி அவரின் அக்கௌன்ட்டிலிருந்து ஏடிஎம் மில் பணம் எடுத்து கொண்டு ஓடிய ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர் .


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஆனந்தநகரில் வசிக்கும் 60 வயதான நபர் தன்னுடைய டெபிட் கார்டை எடுத்து கொண்டு செவ்வாய்க்கிழமை, ஏடிஎம் முக்கு பணம் எடுக்க சென்றார் .அப்போது அவர் 10000 ரூபாய் பணம் எடுத்ததும் அவரின் கார்டு அந்த ஏடிஎம் மில் சிக்கிக்கொண்டது .அதனால் பதட்டமடைந்த அந்த பெரியவர் அங்குள்ள வங்கியில் இது குறித்து புகாரளிக்க சென்றார் .
பின்னர் அவர் திரும்பி ஏடிஎம் க்கு வந்து பார்த்த போது ,30 வயதான ஒரு நபர் ஒரு கார்டை வைத்திருப்பதை கண்டார் .அதன் பிறகு அந்த நபர் அந்த பெரியவரை ஏமாற்றி அவரின் பின் நம்பரை வாங்கி கார்டை சரிசெய்வது போல் நடித்து அவரின் அக்கௌண்டிலிருந்த மேலும் 15000 ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு ஓடி விட்டார் .பின்னர் அந்த பெரியவர் தன்னுடைய அகௌண்டிலிருந்து பணம் போனதை வீட்டிற்கு வந்ததும் தான் உணர்ந்து கொண்டார் .அதனால் அவர் அதிர்ச்சியுற்று உடனே அந்த மர்ம நபர் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெரியவரை ஏமாற்றிய மர்மநபரை தேடி வருகின்றனர்.மேலும் இதுபோல அறிமுகமில்லாதவர்களிடம் ஏடிஎம் மில் இப்படி டெபிட் கார்டு மற்றும் பின் நம்பரை கொடுக்கவேண்டாம் என்று அறிவுருத்தினார்கள் .