×

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்- மம்தா பானர்ஜி

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். மூன்றாவது முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது சில தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தாராளமாக தளர்வுகள் வழங்கப்பட்டன. இதற்குள்ளாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையைப்போல், மரணம் அடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில்கொரொனா பாதிப்பால் இதுவரை 4 ஆயிரத்து
 

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். மூன்றாவது முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது சில தளர்வுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தாராளமாக தளர்வுகள் வழங்கப்பட்டன. இதற்குள்ளாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையைப்போல், மரணம் அடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில்கொரொனா பாதிப்பால் இதுவரை 4 ஆயிரத்து மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 289 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் எனவும்
ஜூன் 8 முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் என மேற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.