×

மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து: பயணிகள் அச்சம்!

வர்கலா அருகே சென்று கொண்டிருந்த மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வர்கலா அருகே மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. காலை 7.47 மணிக்கு ரயிலின் சரக்கு பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலில் இருந்து புகை எழுவதை உணர்ந்த பயணிகள் உடனடியாக, ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும்,
 

வர்கலா அருகே சென்று கொண்டிருந்த மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வர்கலா அருகே மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. காலை 7.47 மணிக்கு ரயிலின் சரக்கு பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலில் இருந்து புகை எழுவதை உணர்ந்த பயணிகள் உடனடியாக, ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும், ரயிலின் சரக்குப்பெட்டியை மட்டும் தனியாக கழற்றி விட்டு பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலின் சரக்குப்பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரக்குப்பெட்டியில் இருந்த பொருட்கள் சேதமானது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.