×

இயற்கை விவசாயம் முதல் 5ஜி வரை... இதுவரையிலான 10 முக்கிய அறிவிப்புகள் இதோ!

 

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராம 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகின்றன. ஆகவே 100 ஆண்டுகள் இலக்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். அந்த வகையில் இதுவரை அவர் அறிவித்த மிக முக்கிய அறிவிப்புகள் இதோ:

  1. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 9.2% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  2. அனைத்து மாநிலங்களிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும். 
  3. பிரதமரின் கதி சக்தி திட்டம் பொருளாதாரத்தை முன்னோக்கி இழுத்து, இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். அதன்படி அடுத்த ஐந்தாண்டுகளில் 14 துறைகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  4. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை பொறுத்தவரை நடப்பாண்டில் நாடு முழுவதும் 25,000 கி.மீ. நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அரசு வழங்கிய 20,000 கோடி ரூபாய் நிதி மூலம் மக்கள் விரைவாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லவும் பொருட்களை விரைவாக நகர்த்துவதற்கும் தொழில்நுட்பத்தின் மூலம் மூலம் இத்திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும். 
  5. இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
  6. சிறு விவசாயிகள் மற்றும் நிறுவனங்களுக்கான மிகச்சிறப்பான பாதையை ரயில்வே உருவாக்கும். உள்ளூர் தயாரிப்புகளின் விநியோகச் சங்கிலிக்கு இது உதவும். இதன் காரணமாக விவசாயிகள் மிக எளிதாகவும் விரைவாகவும் விளைப்பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
  7. 2023ஆம் ஆண்டுக்குள் 2 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு  ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
  8. 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  9. நடப்பாண்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும்.
  10. வந்தே பாரதம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.