×

லாக்டவுனா?.. மத்திய பிரதேசத்திலா… முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் விளக்கம்

மத்திய பிரதேசத்தில் லாக்டவுன் விதிக்க வாய்ப்பு இல்லை என அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்தெரிவித்தார். நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக உள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலத்துடான பயணிகள் போக்குவரத்தை வரும் 15ம் தேதி வரை மத்திய பிரதேச அரசு தற்காலிகமாக ரத்து செய்தது. மேலும், பொதுஇடங்களில் மாஸ்க் அணியாமல் இருப்பது கிரிமினல்
 

மத்திய பிரதேசத்தில் லாக்டவுன் விதிக்க வாய்ப்பு இல்லை என அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்தெரிவித்தார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக உள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலத்துடான பயணிகள் போக்குவரத்தை வரும் 15ம் தேதி வரை மத்திய பிரதேச அரசு தற்காலிகமாக ரத்து செய்தது.

மாஸ்க் அணிந்து வெளியே வரும் மக்கள்

மேலும், பொதுஇடங்களில் மாஸ்க் அணியாமல் இருப்பது கிரிமினல் குற்றத்துக்குள் வரும். மாஸ்க் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அந்த மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் விதிக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அதனை அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மறுத்துள்ளார். இது தொடர்பாக சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது:

லாக்டவுன்

லாக்டவுன் கோவிட்-19க்கு தீர்வு அல்ல. உள்ளூர் அளவில் எந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு கொரோனா ஊரடங்கு உத்தரவு அல்லது லாக்டவுன் அல்ல. அத்தியாவசிய சேவைகள் மாநிலத்தில் தடையின்றி உள்ளன. கோவிட்-19ஐ எதிர்த்து போராட மாநில அரசு அயராது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஆதரவு வேண்டும். நாம் தொற்றுநோயை எதிர்த்து போராட வேண்டுமானால் முதலில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.