×

அரசாங்கத்தை நடத்த முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்க உத்தவ் தாக்கரே ஜி… கடற்படை அதிகாரி ஆவேசம்

அரசாங்கத்தை உங்களால் நடத்த முடியவில்லையென்றால் ராஜினாமா செய்து விடுங்கள் என முதல்வர் உத்தவ் தாக்கரேவை சிவ சேனா தொண்டர்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன், சோனியா காந்தி மற்றும் சரத் பவார் ஆகியோரின் உருவப்படங்களை உத்தவ் தாக்கரே வணங்குவது போன்ற கார்ட்டூன் ஒன்றை பார்வேர்டு செய்தார். அந்த கார்ட்டூன் வரைந்தவரை விட்டு பார்வேர்டு செய்த முன்னாள் கடற்படை அதிகாரி மதன்
 

அரசாங்கத்தை உங்களால் நடத்த முடியவில்லையென்றால் ராஜினாமா செய்து விடுங்கள் என முதல்வர் உத்தவ் தாக்கரேவை சிவ சேனா தொண்டர்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவில், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன், சோனியா காந்தி மற்றும் சரத் பவார் ஆகியோரின் உருவப்படங்களை உத்தவ் தாக்கரே வணங்குவது போன்ற கார்ட்டூன் ஒன்றை பார்வேர்டு செய்தார். அந்த கார்ட்டூன் வரைந்தவரை விட்டு பார்வேர்டு செய்த முன்னாள் கடற்படை அதிகாரி மதன் சர்மாவை சிவ சேனா தொண்டர்கள் கடுமையாக தாக்கினர்.

மதன் சர்மா

மதன் சர்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவ சேனாவை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் சில மணி நேரங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. சிவ சேனா தொண்டர்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி மதன் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதன் சர்மாவை தாக்கும் கும்பல்

அரசாங்கத்தை உங்களால் நடத்த முடியவில்லையென்றால் நீங்கள் ராஜினாமா செய்து விடுங்கள் என நான் முதல்வர் உத்தவ் தாக்கரே ஜியிடம் கேட்டுக்கொள்கிறேன். மகாராஷ்டிராவில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க கூடிய ஒரு அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று காலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, மதன் சர்மாவை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து குறிப்பிடத்தக்கது.