×

“நான் நின்ற இடத்தை கழுவி தீண்டாமை” - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

 

உத்தராகண்ட் ராம் லீலா மைதானத்தில் நான் பேசி சென்ற இடத்தை தூய்மை செய்த, பாஜகவோடு தொடர்புடைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியின் ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற "விஜய் சங்கநாத்" பேரணியில் மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 10 அன்று, 'ஸ்ரீ ராம் சேனா' என்ற வலதுசாரிக் குழு, பேரணி நடைபெற்ற இடத்தை சுத்தம் செய்தது. நாட்டில் தலித்துகளுக்கு இடமில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள மல்லிகார்ஜூன கார்கே, பாஜகவோடு தொடர்புடைய அவர்கள் மதத்தின் பெயரால் அனைவரையும் பிரிக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ராம்லீலா மைதானம் என்பது அனைத்துக் கட்சிகளும் பொதுக்கூட்டங்களுக்குப் பயன்படுத்தும் ஓர் இடம். ஆனால், அவர்கள் செய்தது முதலாவதாக, இந்து மதத்திற்கே எதிரானது. இரண்டாவதாக, அவர்கள் நாட்டைப் பிளவுபடுத்தவும், சாதிகளுக்கு இடையே மோதலைத் தூண்டவும் செயல்படுகிறார்கள்," என்றும் கார்கே கூறினார்.

இதுதொடர்பாக மக்களவையில் உரையாற்றிய கார்கே, “நான் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தினேன். அங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது, ​​நான் எந்தவொரு சமூகம் அல்லது மதத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. அரசின் கொள்கைகளை மட்டுமே மீண்டும் வலியுறுத்தினேன். ஆனால், எனது உரைக்குப் பிறகு, பாஜகவினர் அந்த மேடையை 'புனிதப்படுத்துவதற்காக' அங்கு சுத்தம் செய்தனர். ஒரு ஜனநாயகத்தில் இப்படித்தான் நடக்குமா? நீங்கள் அரசியலமைப்பை எப்படிப் பாதுகாக்கிறீர்கள்?”எனக் கேள்வி எழுப்பினார்.