×

ஜூன் 5 வரை அரபிக் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மும்பை: ஜூன் 5 வரை அரபிக் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் இவ்விரு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஜூன் 5-ஆம் தேதி வரை
 

மும்பை: ஜூன் 5 வரை அரபிக் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் இவ்விரு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஜூன் 5-ஆம் தேதி வரை அரபிக்கடல் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.