×

ஒடிசாவில் திடீர் நிலநடுக்கம்! குலுங்கிய கட்டடங்கள்!!

ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டம் காசிபூர் பகுதியில் இன்று 4 மணி 40 நிமிடங்களுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத
 

ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டம் காசிபூர் பகுதியில் இன்று 4 மணி 40 நிமிடங்களுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் போது வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து டெல்லி, மிசோரம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், நாளை நடைபெறவுள்ள வருடாந்த ஜெகந்நாத் ராத் யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து அரசு தயாராகி வருகிறது.