×

பிச்சை எடுத்து வந்த பெண்ணை காதலித்து கரம்பிடித்த நபர் : ஊரடங்கில் ஓர் காதல் கதை!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் லலிதா பிரசாத். இவர் ஊரடங்கில் உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு உணவு வழங்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு உதவியாக அவரின் டிரைவர் அனில் என்பவரும் வருவது வழக்கம். அப்படி உணவு கொடுக்கும் போது தினமும் பெண் ஒருவர் அங்கு வந்து உணவுகளை வாங்கி செல்வார். இதை கவனித்த அனில் அந்த பெண்ணிடம், நீ ஏன் பிச்சை எடுக்கிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், ‘என் பெயர் நீலம். எனது தந்தை
 

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் லலிதா பிரசாத். இவர் ஊரடங்கில் உணவின்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு உணவு வழங்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு உதவியாக அவரின் டிரைவர் அனில் என்பவரும் வருவது வழக்கம்.

அப்படி உணவு கொடுக்கும் போது தினமும் பெண் ஒருவர் அங்கு வந்து உணவுகளை வாங்கி செல்வார். இதை கவனித்த அனில் அந்த பெண்ணிடம், நீ ஏன் பிச்சை எடுக்கிறாய்? என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண், ‘என் பெயர் நீலம். எனது தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் தனது சகோதரர் தன்னையும், தாயையும் வீட்டில் இருந்து விரட்டி விட்டார். வேலை கிடைக்காததால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட அனில் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன்வந்துள்ளார். இதுகுறித்து தனது முதலாளி லலிதா பிரசாத்திடம் கூறி அவரை திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து கூறும் நீலம், “கடவுள் என்னை கைவிட்டு விட்டதாக நினைத்தேன். ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டேன். ஆனால் கடவுள் என்னை கைவிடவில்லை” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.