×

செல்பி மோகத்தால் மின்னல் தாக்கி 11 பேர் துர்மரணம் – அரண்மனையில் அரங்கேறிய துயரம்!

ராஜஸ்தானில் செல்பி எடுக்கும்போது மின்னல் தாக்கி 11 பேர் மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் 12ஆம் நூற்றாண்டு அமர் அரண்மனை அமைந்துள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு சுற்றுலாதலமான இங்கு மக்கள் பலரும் வருகின்றனர். அவ்வாறு நேற்றும் பல்வேறு மக்கள் வருகை தந்துள்ளனர். அப்போது அங்கே பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. அச்சமயம் 20க்கும் மேற்பட்டோர் அரண்மனையிலுள்ள கண்காணிப்பு கோபுரத்தில் (Watch Tower) இருந்துள்ளனர். இடி, மின்னலை பொருட்படுத்தாமல்
 

ராஜஸ்தானில் செல்பி எடுக்கும்போது மின்னல் தாக்கி 11 பேர் மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் 12ஆம் நூற்றாண்டு அமர் அரண்மனை அமைந்துள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு சுற்றுலாதலமான இங்கு மக்கள் பலரும் வருகின்றனர். அவ்வாறு நேற்றும் பல்வேறு மக்கள் வருகை தந்துள்ளனர். அப்போது அங்கே பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.

அச்சமயம் 20க்கும் மேற்பட்டோர் அரண்மனையிலுள்ள கண்காணிப்பு கோபுரத்தில் (Watch Tower) இருந்துள்ளனர். இடி, மின்னலை பொருட்படுத்தாமல் அனைவரும் ஒன்றிணைந்து செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் பயத்தால் கோபுரத்திலிருந்து குதித்ததால் லேசான காயங்கள் முதல் பலமான காயங்களும் ஏற்பட்டுள்ளன. உடனே அங்கே விரைந்த மீட்புப் படையினர் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் ராஜஸ்தானையே உலுக்கியுள்ளது. மின்னல் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். அமர் அரண்மனையில் நடந்த சம்பவம் தவிர, நேற்று மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதலில் மேலும் 9 பேர் உயிரிழந்தனர். பரன் மற்றும் ஜலவரில் தலா ஒருவரும் கோட்டாவில் நான்கு பேரும் தோல்பூரில் மூன்று பேரும் உயிரிழந்தனர். இவர்களில் 7 பேர் குழந்தைகள்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தானின் சில பகுதிகளில் மின்னல் தாக்கி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவரின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.