×

”இனி வீடுகளில் அமிதாப் பச்சனுடன் உரையாடலாம்”-அலெக்சா குரலுக்காக அமிதாப் உடன் அமேசான் ஒப்பந்தம்

விரைவில் அமிதாப் பச்சனின் சிம்மக்குரல், அமேசான் நிறுவனத்தின் அலெக்சா குரலாக வீடுகளில் ஒலிக்க இருக்கிறது. இது தொடர்பாக அமிதாப் பச்சனுடன் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் எக்கோ உள்ளிட்ட ஸ்மார்ட் ஹோம் சாதனங்களில், அலெக்ஸா என்ற வர்சுவல் அசிஸ்டெண்ட் வசதி உண்டு. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இதன் மூலம், நமக்கு தேவையான கருவிகளை, அதன் செயல்பாட்டை, குரல் வழி உத்தரவுகளின் மூலம் இயக்கலாம். அப்போது அந்த குரல் உங்களின் தேவைகளுக்கு பதில் அளிக்கும்.
 

விரைவில் அமிதாப் பச்சனின் சிம்மக்குரல், அமேசான் நிறுவனத்தின் அலெக்சா குரலாக வீடுகளில் ஒலிக்க இருக்கிறது. இது தொடர்பாக அமிதாப் பச்சனுடன் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் எக்கோ உள்ளிட்ட ஸ்மார்ட் ஹோம் சாதனங்களில், அலெக்ஸா என்ற வர்சுவல் அசிஸ்டெண்ட் வசதி உண்டு. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இதன் மூலம், நமக்கு தேவையான கருவிகளை, அதன் செயல்பாட்டை, குரல் வழி உத்தரவுகளின் மூலம் இயக்கலாம். அப்போது அந்த குரல் உங்களின் தேவைகளுக்கு பதில் அளிக்கும்.

இந்த அலெக்சா குரலாக இனி அமிதாப் பச்சனின் சிம்மக்குரல் ஒலிக்கப்போகிறது. இதற்காக அமேசான் நிறுவனம் அமிதாப் பச்சனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அமிதாப், இந்தியில் அலெக்சா குரலாக ஒலிக்க இருக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆங்கிலத்தில் அவரின் குரலுடன் உரையாட முடியுமா என்பது தெளிவுப்படுத்தப்பட வில்லை.

இனி, அமேசானின் அலெக்சா வசதி கொண்ட ஸ்மார்ட் சாதனங்களில் ”ஹே அலெக்ஸா.. ஹலோ டு அமிதாப் பச்சன்” என்று சொன்னால் போதும், அமிதாப்பின் சிம்மக்குரல் உங்களுடன் உரையாடும் என தெரிகிறது. இதன் மூலம் அமிதாப்பிடம் ஜோக் முதல் அறிவுரை வரை அனைத்தும் கேட்டு உரையாடி மகிழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ்.முத்துக்குமார்