×

3 மாதத்திற்கு பிறகு 50 ஆயிரத்துக்கும் குறைவு – இந்தியாவில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை

கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆயினும் குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும் ஆறுதல் அளிக்கும் செய்திகள். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 46,790 ஆக குறைந்தது. கடந்த 3 மாதத்தில், புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது இதுவே முதல் முறை. இதற்கு முன் கடந்த ஜூலை 28ம் தேதி அன்று, புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 47, 703 ஆக இருந்தது. கோவிட் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், இறப்பு
 

கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆயினும் குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும் ஆறுதல் அளிக்கும் செய்திகள்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 46,790 ஆக குறைந்தது. கடந்த 3 மாதத்தில், புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது இதுவே முதல் முறை. இதற்கு முன் கடந்த ஜூலை 28ம் தேதி அன்று, புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 47, 703 ஆக இருந்தது.

கோவிட் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், இறப்பு வீதமும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்தியாவில் தற்போது கோவிட்  பாதிப்பு 7.5 லட்சத்துக்கும் (7,48,538) கீழ் உள்ளது. இது மொத்த பாதிப்பில் 9.85%.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்தை (67,33,328)  கடந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் குணடைந்தவர்களுக்கு இடையேயான வித்தியாசம் இன்று 59,84,790 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 69,720 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் வீதம் 88.63% மாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 587 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 2வது நாநளாக, உயிரிழந்தோர் எண்ணிக்கு 600க்கு கீழ் உள்ளது.

குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக  இந்தியா உள்ளது.

இந்திய அளவில் குணமடைபவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு நான்காம் இடத்திலும், புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் ஐந்தாம் இடத்திலும், இறப்பு எண்ணிக்கையில் ஐந்தாம் இடத்திலும் தமிழ்நாடு உள்ளது.