×

ஓராண்டில் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை 74 சதவிகிதம் குறைந்தது!

கடந்த ஓராண்டில் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை 74 சதவிகிதமும், பயங்கரவாத தாக்குதல் 36 சதவிகிதமும் குறைந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு ஆக உள்ளது. அங்கு தொடர் ஊரடங்கு, இணைய – தகவல் தொடர்பு துண்டிப்பு போன்ற அடக்கு முறைகள் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. அதே நேரத்தில், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 2019ம் ஆண்டு 189 ஆக இருந்த வன்முறை
 

கடந்த ஓராண்டில் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை 74 சதவிகிதமும், பயங்கரவாத தாக்குதல் 36 சதவிகிதமும் குறைந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு ஆக உள்ளது. அங்கு தொடர் ஊரடங்கு, இணைய – தகவல் தொடர்பு துண்டிப்பு போன்ற அடக்கு முறைகள் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. அதே நேரத்தில், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


2019ம் ஆண்டு 189 ஆக இருந்த வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜூலை 15 வரையிலான காலக்கட்டத்தில் 120 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பாதுகாப்பு வீரர்களின் உயிரிழப்பு 75 ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 35 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை 389 ஏற்பட்டது. இந்த ஆண்டு அது 102 ஆக குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 74 சதவிகிதம் குறைவாகும்.
இந்த காலக்கட்டத்தில் 141 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், போர் நிறுத்தத்தை மீறிய தாக்குதல் 267ல் இருந்து 487 ஆக அதிகரித்துள்ளது என்று காஷ்மீர் டிஜிபி தில்பாங் சிங் தெரிவித்துள்ளார்.