×

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல்நிலை கவலைக்கிடம்!

மாட்டு தீவன ஊழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் 4 மாட்டு தீவன ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கிட்னி மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால்
 

மாட்டு தீவன ஊழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் 4 மாட்டு தீவன ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கிட்னி மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த ஒரு வருடமாக ராஞ்சியில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவரது சிறுநீரகம் 25% மட்டுமே செயல்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று லாலு பிரசாத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற ஜனவரி 22- ஆம் தேதிக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடதகக்து.