×

இருதரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழக்க சீனாவே காரணம் – மத்திய அரசு

லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் சண்டையிட்டதில் சீனா தரப்பில் 5 பேரும், இந்திய தரப்பில் 3 பேரும் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரருடன் இருவர் வீரமரணமடைந்தனர். அதில் ஒருவர் தெலங்கானாவை சேர்ந்த கர்ணல் சந்திரபாபு. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது சந்திரபாபுவின் குடும்பத்தினர் தெலங்கானாவில் சூர்யபேட்டை என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். தனது மகன் நாட்டுக்காக உயிரிழந்தது பெருமையாக இருப்பதாக சந்திரபாபுவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். கர்ணல் சந்திரபாபுவின்
 

லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் சண்டையிட்டதில் சீனா தரப்பில் 5 பேரும், இந்திய தரப்பில் 3 பேரும் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரருடன் இருவர் வீரமரணமடைந்தனர். அதில் ஒருவர் தெலங்கானாவை சேர்ந்த கர்ணல் சந்திரபாபு. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது சந்திரபாபுவின் குடும்பத்தினர் தெலங்கானாவில் சூர்யபேட்டை என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். தனது மகன் நாட்டுக்காக உயிரிழந்தது பெருமையாக இருப்பதாக சந்திரபாபுவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். கர்ணல் சந்திரபாபுவின் தந்தை ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவார். தந்தையின் விருப்பத்தின் பேரிலேயே சந்திரபாபு ராணுவத்தில் சேர்ந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் லடாக் எல்லையிலுள்ள நிலைமையை சீன தரப்பு ஒருதலைப்பட்சமாக மாற்ற முயன்றதால் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. சீனாவால் வன்முறை வெடித்ததில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், சீனத் தரப்பு ஒப்பந்தத்தை மதித்திருந்தால் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.