×

ஓட்டுநருடன் ஓட்டம் பிடித்த பிரபல யூடியூபர் மனைவி!

 

கேரளாவில் பிரபல இன்ஸ்டாகிராம் CELEBRITY-யின் மனைவி, கணவரைப் பிரிந்து உள்ளூர் பேருந்து ஓட்டுநருடன் பணம், நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்ததாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, சமூகவலைத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள யூடியூபர் அகில் என்.ஆர்.டி-யின் மனைவி பேருந்து நடத்துனருடன் இரவு உடையில் தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் மேகா இரவு உடை அணிந்து தனது சூட்கேஸ்களை கையில் ஏந்தியபடி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகிலும் அவரது மனைவி மேகாவும் இப்போது ஒன்றாக இல்லை என்றும், மேகா இரவோடு இரவாக ஒரு பேருந்து நடத்துனருடன் தப்பி ஓடிவிட்டார் என்றும் செய்திகள் பரவலாகப் பேசப்படுகின்றன. இருப்பினும், அகில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவும் விரும்பவில்லை, மேகா செய்த செயலுக்காக அவர் மீது பழி சுமத்தவும் இல்லை. அகிலும் மேகாவும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.