×

கேரளாவில் 510 டன் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது.. முதல்வர் பினராயி விஜயன் அரசு தகவல்

கேரளாவில் 510 டன் ஆக்சிஜின் கையிருப்பு உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது. நம் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. அதேசமயம் ஆக்சிஜன் சப்ளை குறைவாக உள்ளதால் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் டெல்லி உள்பட பல மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் பலியாகி வருகின்றனர். இதனால் நாட்டில் அனைத்து
 

கேரளாவில் 510 டன் ஆக்சிஜின் கையிருப்பு உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. அதேசமயம் ஆக்சிஜன் சப்ளை குறைவாக உள்ளதால் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் டெல்லி உள்பட பல மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் பலியாகி வருகின்றனர்.

கே.கே.சைலஷா

இதனால் நாட்டில் அனைத்து மாநிலங்களும் ஆக்சிஜன் கையிருப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கேரளாவில் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஷா தலைமையில் ஆக்சிஜன் கிடைப்பை உறுதி செய்வது தொடர்பாக சிறப்பு உயர் மட்ட குழு சந்திப்பு ஒன்று நடந்தது. இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்த கூட்டத்தில் தினசரி ஆக்சிஜன் உற்பத்தி, விநியோகம், மாநிலத்தில் ஆக்சிஜன் பயன்பாடு மற்றும் வரும் நாட்களில் நோயாகளின் எண்ணிக்கை அதிகரிப்பை எதிர்கொள்ள தயார் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆக்சிஜன் சிலிண்டர்

தற்போது அரசு மருத்துவமனைகளில் 220 டன் ஆக்சிஜன் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா மற்றும் இதர நோயாளிகளுக்கு தோரயமாக 100 டன் ஆக்சிஜன் தேவைப்படும். விநியோகத்துக்கு பிறகு மாநிலத்தில் 510 டன் ஆக்சிஜன் கையிருப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பாதகமான நிலையை எதிர்க்கொள்ளும் வகையில் ஆக்சிஜன் கையிருப்பை ஆயிரம் டன்னாக உயர்த்த சாதகமான அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்.