×

கட்டுக்குள் வராத கொரோனா; 2 வாரங்களுக்கு ‘முழு ஊரடங்கு’ அமல்படுத்த முடிவு!

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கி இருப்பதால் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தணிந்து இருக்கும் சூழலில் கேரளாவில் மட்டும் பாதிப்பு சற்றும் குறையாமல் உள்ளது. அண்மையில் கேரளாவுக்கு விரைந்த மத்திய குழு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு பரிந்துரைத்தது. அதன் படி, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டன. அப்போது பாதிப்பு சற்று குறைந்ததால் ஓணம் பண்டிகைக்காக மீண்டும்
 

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கி இருப்பதால் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தணிந்து இருக்கும் சூழலில் கேரளாவில் மட்டும் பாதிப்பு சற்றும் குறையாமல் உள்ளது. அண்மையில் கேரளாவுக்கு விரைந்த மத்திய குழு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு பரிந்துரைத்தது. அதன் படி, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டன. அப்போது பாதிப்பு சற்று குறைந்ததால் ஓணம் பண்டிகைக்காக மீண்டும் தளர்வுகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக, கொரோனா பாதிப்பு மீண்டும் பன்மடங்கு பரவி பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் பதிவாகிறது.

பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர சில அறிவுறுத்தல்களை வழங்கிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கேரளாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாததால் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வராமல் உள்ளது. எனவே, அதில் கவனம் செலுத்தி கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது.

கேரளாவின் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தற்போது இந்தியாவிலேயே அதிகப்படியான பாதிப்பு பரவும் மாநிலமாக கேரளா உள்ளது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. கேரளாவில் குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி முழு ஊரடங்கு அமல்படுத்தவும் தாலுகா அளவிலான கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.