×

கேரளா: தங்கக் கடத்தலில் கிடைத்த பணத்தில் பயங்கரவாதிகளுக்கு உதவி! – அதிர்ச்சித் தகவல்

தங்கம் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் பயங்கரவாதிகளுக்கு பெருமளவுக்கு நிதி உதவி செய்யப்பட்டுள்ள விவரம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்துக்கு வந்த பார்சல் வழியாக தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் நிறுவனம் ஒன்றின் மேலாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தங்கக்
 

தங்கம் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் பயங்கரவாதிகளுக்கு பெருமளவுக்கு நிதி உதவி செய்யப்பட்டுள்ள விவரம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்துக்கு வந்த பார்சல் வழியாக தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் நிறுவனம் ஒன்றின் மேலாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தங்கக் கடத்தலுக்கும் தொடர்பு என்று கேரள எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, இந்த வழக்கு என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பல ஆண்டுகளாக தங்கக் கடத்தல் நடந்து வருவதும், தங்கத்தின் மூலம் கிடைக்கும் பெரும் பணம் பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்பட்டதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த தங்கக் கடத்தல் குறித்த ஆவணங்களை அவர்கள் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஸ்வப்னா 2019ம் ஆண்டு வரை ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவர் அங்கிருந்து விலகிய பிறகும் அவர்களுக்காக பணி செய்து கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பல அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.