×

கேரள தங்க கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் !

தங்கக் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது . கருப்பு பணத்தடுப்பு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஜாமீன் அளித்துள்ளது. சுங்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காஃபியோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ஸ்வப்னா சுரேஷ் தற்போது சிறையில் இருந்து வெளிவர முடியாது என்பது கூடுதல் தகவல். ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் பெயரில் விமானத்தின் மூலம் பெங்களூருக்கு
 

தங்கக் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது . கருப்பு பணத்தடுப்பு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஜாமீன் அளித்துள்ளது. சுங்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காஃபியோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ஸ்வப்னா சுரேஷ் தற்போது சிறையில் இருந்து வெளிவர முடியாது என்பது கூடுதல் தகவல்.

ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் பெயரில் விமானத்தின் மூலம் பெங்களூருக்கு வந்த 30 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரித்ததில் பெரும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதில் முதல்வர் அலுவலகத்தில் ஐடி பிரிவில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். மேலும் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு பேசும் பொருளாக மாறிய நிலையில் அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் நியமனத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒப்புதல் அளித்தார் என அமலாக்க துறையினர் குற்றம் சாட்டியது கவனிக்கத்தக்கது.