×

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடத்த முயன்ற 30 கிலோ தங்கம் குறித்து பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் கடிதம்!

கேரளாவில் தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு சம்மந்தப்பட்ட மத்திய அமைப்புகளின் விசாரணை தேவை என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 5ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பார்சலில் வந்த சுமார் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த கடத்தலில் பல்வேறு கோணங்கள் இருப்பதால் அனைத்து விதத்திலும் முழுமையான விசாரணை தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
 

கேரளாவில் தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு சம்மந்தப்பட்ட மத்திய அமைப்புகளின் விசாரணை தேவை என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 5ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பார்சலில் வந்த சுமார் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த கடத்தலில் பல்வேறு கோணங்கள் இருப்பதால் அனைத்து விதத்திலும் முழுமையான விசாரணை தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சம்பவத்திற்கு தொடர்புடைய அனைத்தையும் வேரறுக்க வேண்டும் என கூறியுள்ள அவர், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து மத்திய அமைப்புகளும் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு கேரள அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இதனிடையே திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “கேரள தங்க கடத்தலில் மாநில அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது. எந்குற்றவாளியையும் அரசு ஒருபோதும் காப்பாற்றாது. தங்க கடத்தலில் சி.பி.ஐ., மட்டுமல்லாது எந்த விசாரணையையும் கேரள அரசு பரிபூரணமாக வரவேற்கிறது. விசாரணைக்கு எல்லா ஒத்துழைப்பும் அரசு நல்கும். கேரள அரசு செயலாளர், விவாததிற்குரிய பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக புகார் வந்தது. அதுபோன்ற ஆள் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியக் கூடாது என்ற காரணத்தால் தான் அரசு செயலர் பணியில் அவர் இருந்து நீக்கப்பட்டார்” எனக் கூறினார்.