×

வெடித்துச் சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் கப்பல்- கேரளாவில் அதிர்ச்சி

 

கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.


கேரள கடற்கரையிலிருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் சிங்கப்பூர் சரக்கு கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி, இரண்டு நாட்களுக்கும் மேலாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தீ ஆபத்தான சரக்குகளுக்கு பரவினாலோ அல்லது கப்பல் கரைக்கு அருகில் சென்றாலோ சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதாக மீட்புக்குழு கூறியுள்ளது. இதுவரை எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்து ஏற்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் ஏ1-ஆக கப்பல் உரிமையாளர், ஏ2-ஆக கப்பல் கேப்டன், ஏ3-ஆக கப்பல் குழுவினர் சேர்க்கப்பட்டுள்ளன. மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சரக்கு கப்பல் கையாளப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.